தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டி அதிரவைத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 98-ஆக பதிவாகி இருந்த நிலையில் இன்று 139 ஆக உயர்ந்துள்ளது.தலைநகர் சென்னையில் ஒருநாள் பாதிப்பு நேற்று 44 ஆக பதிவான நிலையில், இன்று 59 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 46 ல் இருந்து 58 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 613- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று 14 ஆயிரத்து 66 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story