முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்கவீரர், வீராங்கனைகள் சென்னை பயணம்:கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க தேனி மாவட்டத்தில் இருந்து வீரர், வீராங்கனைகள் சென்னைக்கு புறப்பட்டனர்.
தேனி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தேனியில் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட 512 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். சென்னையில் மாநில அளவிலான முதல் பிரிவு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் சிலம்பம், கைப்பந்து, கபடி ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் 69 வீரர், வீராங்கனைகள் தேனியில் இருந்து நேற்று சென்னைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து புறப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வாழ்த்து தெரிவித்து அவர்களை வழியனுப்பி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story