டாஸ்மாக் பாரை காலி செய்யக்கோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உரிமையாளர் தர்ணா


டாஸ்மாக் பாரை காலி செய்யக்கோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உரிமையாளர் தர்ணா
x

டாஸ்மாக் பாரை காலி செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உரிமையாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஈரோடு

கோபி முருகன்புதூர் தறி குடோன் வீதியை சேர்ந்த பழனிச்சாமி, தனது மனைவி, மகனுடன் மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக படிக்கட்டில் திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை எழுப்பி, பொதுமக்கள் காத்திருக்கும் அறைக்கு அனுப்பி வைத்து, அவரது மனுவை பெற்றனர். அந்த மனுவில் பழனிச்சாமி கூறி இருந்ததாவது:-

கோபி பாரியூரில் எனக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை, பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில், பார் உள்ள இடத்தை ஒருவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த நபர் எனது இடத்தை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த நபர் கடந்த 9 மாதங்களாக வாடகை எதுவும் தரவில்லை. வாடகை குறித்து கேட்டால் அடியாட்களை வைத்து என்னை கொலை செய்து விடுவதாகவும், ரூ.8 லட்சம் கொடுத்தால் பாரினை காலி செய்வதாகவும் மிரட்டுகிறார். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story