புகையிலைப்பொருட்கள் பதுக்கியவர் கைது


புகையிலைப்பொருட்கள் பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:30 AM IST (Updated: 2 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புகையிலைப்பொருட்கள் பதுக்கியவர் கைது

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் ரெட்டியபட்டி பகுதியில் உள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் விற்பனைக்காக 19 கிலோ புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மளிகை கடையை நடத்தி வந்த ரெட்டியபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 37) என்பவரையும் கைது செய்தனர்.





Next Story