புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும், திருவேங்கடம் அருகே உள்ள என். ஜி.ஓ.காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது39) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 75 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story