மதனகோபாலசுவாமி கோவிலில் இன்று திருத்தேர் 8-ம் திருவிழா

மதனகோபாலசுவாமி கோவிலில் திருத்தேர் 8-ம் திருவிழா பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட புகழ்பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் கடந்த 5-ந்தேதி விமரிசையாக நடந்தது. திருத்தேர் திருவிழா நிறைவடைந்து 8-ம் திருவிழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு உற்சவ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனமும், கம்பத்து ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவிராயருக்கு திருமஞ்சனம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் திருவீதி உலா நடக்கிறது. திருத்தேர் 8-ம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பெரம்பலூர் நகர செங்குந்தர் மகாஜன சங்கத்தினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story