கழிவறை மறுசீரமைப்பு பயிற்சி


கழிவறை மறுசீரமைப்பு பயிற்சி
x

கழிவறை மறுசீரமைப்பு பயிற்சி

திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகள் சார்பில் கழிவறையை மறுசீரமைப்பு செய்வதற்கான பயிற்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் முருகதாஸ், துணைத்தலைவர் அஸ்கார் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகள் சார்பில் கழிவறையை மறுசீரமைப்பு செய்ய ஒரு உறிஞ்சு குழியை இரு உறிஞ்சி குழியாக மாற்றி அமைத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற்றது. இதில் பணி மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கொத்தனார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


Next Story