நாளை மின்தடை

தஞ்சையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் புதுஆற்று கீழ்க்கரை கருப்பாயி அம்பலக்காரத்தெரு, வெட்டுக்காரத்தெரு, பிரகதமணி மகால், அண்ணா மருத்துவமனை, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story