ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ராமேசுவரம், தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறையை யொட்டி ராமேசுவரம் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று குவிந்திருந்தனர். இவ்வாறு புனித நீராடிய பக்தர்கள் பிரகாரத்தின் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் தனுஷ்கோடி கடைகோடி பகுதியான அரிச்சல் முனை சாலை வளைவு மற்றும் கடற்கரை பகுதியில் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் ராமேசுவரம் பகுதிக்கு வர தொடங்கி உள்ளதால் திட்டக்குடி சந்திப்பு சாலையில் இருந்து கோவிலின் மேற்கு ரதவீதி சாலை மற்றும் தனுஷ்கோடி செல்லும் சாலை, பஸ் நிலையம் செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சொல்கின்றன.


Next Story