மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x

வாணியம்பாடி பகுதியில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

இடைவிடாது மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று காலையிலிருந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. மழையின்போது காற்றும் வீசி வருகிறது.

மாண்டஸ் புயல் காரணமாக வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம் ஒன்று வேரோடு சாய்தது, தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றியமைக்கப்பட்டது. 2 மணி நேரத்துக்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு அப்புறப்படுத்தினர்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு, மரங்களை அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் அருகே மரம் ஒன்று மழையினால் வேரோடு சாய்ந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலமாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

வாணியம்பாடியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது, தாழ்வான பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதும் பாலாற்றில் கலக்கும் நிலை உள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கும் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story