குறுவள மைய ஆசிரியர்களுக்கான பயிற்சி

குறுவள மைய ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் புறாக்கிராமம் குறு வள மையத்தில் குறுவள மைய ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இணை இயக்குனர் பாஸ்கரசேதுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கருத்தாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். பயிற்சியாளர்கள் அதனை எவ்வாறு மாணவர்களிடம் பயிற்றுவிக்க வேண்டும் என அவர் கூறினார். மேலும் மாணவர்களின் எதிர்கால கல்வியின் நோக்கம் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், கார்த்திகேயன், மாவட்ட கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சந்தானம், ஆசிரியர் பயிற்றுனர்கள் துர்க்கா, பிரபு மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.