பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய அடிப்படை பணிகள் குறித்து பயிற்சி

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலைய அடிப்படை பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் நிலைய அடிப்படை பணிகள் குறித்த தகவல்களை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
அதன்பேரில் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
புகார்களை அளிக்க வரும் பொதுமக்களிடத்தில் போலீசார் எப்படி கனிவாக பேச வேண்டும், மனுவை எப்படி பெற வேண்டும்.
மனுவில் அனுப்புனர், பெறுனர் எப்படி இருக்க வேண்டும் கருத்துக்கள் என்னவாக இருக்க வேண்டும், மேலும் காயமடைந்தவர்கள் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்,
முதல் தகவல் அறிக்கை தருவதற்கு என்னென்ன தேவை என்று மாணவர்களிடம் விளக்கப் பட்டது. மேலும் போலீஸ் நிலையத்தில் எந்தெந்த பொருட்களை கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் போலீசார், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.