எழுத்தறிவு பெறாதவர்களுக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி


எழுத்தறிவு பெறாதவர்களுக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் எழுத்தறிவு பெறாதவர்களுக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு பெறாதோருக்கு எழுத்தறிவு வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த வகுப்புகள் நடத்துவது குறித்து மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் இருந்தும் 2 பேர் வீதம் 12 ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சாந்தி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், ஆசிரிய பயிற்றுனர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story