ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி


ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2022 1:00 AM IST (Updated: 6 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேலம்

சேலத்தில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதன்படி சேலம் அண்ணா பூங்கா வளாக மணிமண்படத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜு, ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க்வெங்கடாஜலம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜான்கென்னடி, வேபிரிட்ஜ் ராஜேந்திரன் மற்றும் பகுதி செயலாளர்கள், மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர்

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இதில். மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் வெங்கடேசன், உதயசங்கர், முத்து, இருசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story