திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி,
திருச்சி, திருவெறும்பூர் பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர். உருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் வருகிற 6-ந்தேதி மாலை நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசுகிறார். இது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் தலைமை தாங்கினார். இதில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், துணைச் செயலாளர்வனிதா, இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பூபதி, எம்.ஆர்.முஸ்தபா, சுரேஷ்குப்தா, ஏர்போர்ட்விஜி, கலைவாணன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.