தூத்துக்குடிஅனல்மின்நிலையத்தில்4 எந்திரங்கள் நிறுத்தம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 4 எந்திரங்கள் நிறுத்தம் செய்யப்பட்டதால், 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 4 மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் 840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அனல்மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின்நிலையத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது.
இதன்பின்னர் சமீபகாலமாக அனல்மின்நிலையத்தில் உள்ள எந்திரங்கள் சீராக இயங்கி வருகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் மின்சார தேவையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
4 எந்திரங்கள் நிறுத்தம்
இந்த நிலையில் அனல்மின் நிலையத்தில் உள்ள 1, 2-வது மின்சார உற்பத்தி எந்திரங்களில் எலக்ட்ரிக்கல் பழுது காரணமாக எந்திரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
மேலும் நேற்று மின் தேவை குறைந்ததால் 3, 5-வது மின்சார உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன.
இதனால் 4-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
840 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
அனல்மின்நிலையத்தில் 4 எந்திரங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நேற்று பாதிக்கப்பட்டது.
பழுதடைந்த எந்திரங்களை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-------------