இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது


இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது
x

இருசக்கர வாகன திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மகிமைபுரம் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் விசாரணையில், அவர் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த ராஜ்குமார்(வயது 26) என்பதும், அவர் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவரது நண்பரான மதனத்தூர் காலனி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(26) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து ராஜ்குமார், தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story