உடன்குடி தாண்டவன்காடு பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


உடன்குடி தாண்டவன்காடு பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

உடன்குடி தாண்டவன்காடு பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தாண்டவன்காடு பெரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. 2-ம் நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நான்காம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து 4 நாள் நடந்தது. 4-ம் நாள் காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து சென்று கோபுர கலசங்களுக்கு விமான அபிசஷகம் பெரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியன நடந்தது. நண்பகல்12.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story