உசிலம்பட்டி, அவனியாபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


உசிலம்பட்டி, அவனியாபுரம் பகுதிகளில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x

உசிலம்பட்டி, அவனியாபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மதுரை

உசிலம்பட்டி

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக உசிலம்பட்டி, அவனியாபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி மின்கோட்ட அளவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது. இதனால் உசிலம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர் பகுதி, கவுண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளப்பட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லதேவன்பட்டி, சீமானூத்து, கொங்குபட்டி, மேக்கிழார்பட்டி, கீரிப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையால் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளார்.

மேலும் தும்மக்குண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலபுரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி வலங்கை குளம், உச்சபட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி அதனை சுற்றிய ஊர்களிலும், இடையபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லானி உள்ளிட்ட பகுதிகளிலும், வாலாந்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அய்யனார்குளம், குறவகுடி, விண்ணகுடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், விக்ரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பனம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், மொண்டிக்கொண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மொண்டிகுண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பாப்பாபட்டி, கொப்பளிப்பட்டி, வெள்ளை மலைப்பட்டி, வையம்பட்டி லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சுப்பிரமணியபுரம்

மதுரை சுப்பிரமணியபுரம் துணைமின்நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சுந்தர்ராஜபுரம், வெங்கடாஜலபுரம், வி.வி.கிரிசாலை, நியூ ரைஸ்மில் ரோடு 1 மற்றும் 2-ம் தெரு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் போலீஸ் நிலையம் மற்றும் எம்.எம்.சி. காலனி ஆகிய உயர்ழுத்த மின் பாதைகளில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைெபற இருப்பதால் பெரியசாமிநகர், திருப்பதி நகர், சி.ஏ.எஸ்.நகர், சொக்குபிள்ளை நகர், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம்.நகர், எஸ்.கே.ஆர்.நகர், முல்லை நகர், ராஜிவ்காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஸ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள், எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, பைபாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள், பராசக்திநகர், காவேரி நகர், ஆறுமுகநகர் 1,2-வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம்நகர் மற்றும் எம்.எம்.சிட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 முதல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் விக்கிரமங்கலம், காடுபட்டி, பாண்டியன் நகர், நரியம்பட்டி, கீழப்பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலபெருமாள்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுமுதலைகுளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, வடுகபட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story