வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது


வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது

நீலகிரி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது முதுமலை சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் மான்கள் சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.

இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. குறிப்பாக முதுமலை சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் வனவிலங்குகளும் சாலையை கடப்பதால் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை முதுமலை வனத்துக்குள் அதிவேகமாக இயக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story