3 டன் முருங்கைக்காய் கொள்முதல்


3 டன் முருங்கைக்காய் கொள்முதல்
x
திருப்பூர்

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் ஒழுங்குமுறை கூடத்தில் 3 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

முருங்கைக்காய் கொள்முதல்

வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் ெகாள்முதல் நிலையம் செயல்பட்டது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் முருங்கைக்காய்களை கொண்டு வந்திருந்தனர்.

மொத்தம் 40 விவசாயிகள் 3 டன் முருங்கைகாய்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த முருங்கைக்காய்களை வாங்குவதற்கு முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 30-க்கும், மரம் முருங்கை ரூ.25-க்கும், கரும்புமுருங்கை ரூ.40-க்கும் கொள்முதல் செய்தனர்.

ஓட்டல்களுக்கு அனுப்பி வைப்பு

கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்ெட்டுகளுக்கு அனுப்பி வைப்பதாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார். முருங்கை மரங்களில் அதிகமாக பூக்கள் பூத்துள்ளதால் அடுத்த மாதம் முருங்கைக்காய் வரத்து அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story