கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு வரவேற்பு


கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு வரவேற்பு
x

ஆன்மிக பாத யாத்திரையாக கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மிக தலங்களுக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு குத்தாலத்தில் இருந்து பாத யாத்திரையாக கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகங்கள் முன்னே செல்ல மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் ஒலிக்க தருமபுரம், சூரியனார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனங்களின் கட்டளை தம்பிரான்கள், வேத, சிவாகம மற்றும் திருமுறை பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் வருகை தந்தனர் தருமபுர ஆதீனத்திற்கு கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், பூரணகும்ப மரியாதை கொடுத்தும், மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கோவிலுக்கு நடந்து சென்ற ஆதீனத்துக்குஞ மதுரை ஆதீனம் சார்பிலும், கோவில் நிர்வாகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை கோவில் தர்பார் மண்டபத்தில் சொக்கநாதர் வழிபாடு செய்தார் இதை தொடர்ந்து மாலை கஞ்சனூரில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி சூரியனார் கோவிலுக்கு சென்றார். அங்கு கிராம மக்கள் சார்பிலும், ஆதீனம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story