கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Nov 2022 7:00 PM GMT (Updated: 25 Nov 2022 7:00 PM GMT)

தொப்பம்பட்டி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திண்டுக்கல்

தொப்பம்பட்டி அருகே ராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேல்கரைப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 540 கால்நடைகளுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டன. அதில் 20 காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டன. 30 பசுமாடுகளுக்கு சினை சோதனை செய்யப்பட்டது. மேலும் 600 ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் 10 கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு மலடு நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிறந்த 3 கலப்பின கிடேரி கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு, சிறந்த கால்நடை வளர்ப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story