மனைப்பட்டா கேட்டுகோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


மனைப்பட்டா கேட்டுகோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மனைப்பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றகையிட்டனர். பின்னர் அங்கிருந்த அதிகாரியிடம், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story