புத்தாண்டை முன்னிட்டு இறகுப்பந்து போட்டி


புத்தாண்டை முன்னிட்டு இறகுப்பந்து போட்டி
x

நாட்டறம்பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு நாட்டறம்பள்ளி இறகு பந்து குழு சார்பில் நாட்டறம்பள்ளி தாலுகா அளவில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி, வெலக்கல்நத்தம், டோல்கேட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 16 அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் மயில்வாகனன், சுரேஷ், பிரித்திக்குமார் அடங்கிய அணியினர் முதல் பரிசு பெற்றனர். குமார், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய அணியினர் 2- வது பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு இறகு பந்து குழுவினர் ரொக்க பணம் மற்றும் கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.


Next Story