வண்ணாத்திப்பட்டியில் ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தர்மபுரி
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே மாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாத்திப்பட்டியில் 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணி, ஊராட்சி செயலாளர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், முருகேசன், முருகவேல் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story