வெள்ளை மரியாள் கல்லறை திருவிழா


வெள்ளை மரியாள் கல்லறை திருவிழா
x

வெள்ளை மரியாள் கல்லறை திருவிழாவில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியில் வெள்ளை மரியாள் கல்லறை உள்ளது. இந்த கல்லறையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ தவக்காலத்தின் 5 மற்றும் 6-ம் ஞாயிற்றுக்கிழமை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான கல்லறை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி திருச்சி மறை மாவட்டத்தின் முதன்மை குரு அருட்பணி அந்துவான் முதல் திருப்பலியை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டவர்களுக்கு அப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி உணவு சமைத்து விருந்து அளித்தனர். விழாவில் புதுக்கோட்டை, கீரனூர், திருமயம், விராலிமலை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story