விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டம்


விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டம்
x

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கண்மணி முன்னிலை வகித்தார். நகராட்சி இளநிலை உதவியாளர் சுலைமான் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், அ.தி.மு.க. கவுன்சிலர் கிறஸ் இமாக்குலேட் நகராட்சியில் புதிதாக வாகனம் வாங்க உள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தி,மு.க. கவுன்சிலர் குட்டி கணேசன் பேசும்போது, மாதந்ேதாறும் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்த பொக்லைன் எந்திரத்துக்கு லட்சக்கணக்கில் பணம் ஒதுக்குகிறீர்கள். அதற்கு பதிலாக, நகராட்சி சார்பாகவே புதிய பொக்லைன் எந்திரம் வாங்கலாம் என்று கூறினார். அதற்கு ஆணையாளர் கூறிய பதிலை ஏற்க மறுத்து, அவர் வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில், அகஸ்தியர் அருவியில் நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணம் வசூலிப்பதை வனத்துறை நிறுத்த வேண்டும், மேல கொட்டாரம் பகுதியில் உள்ள கழிப்பிடம் பழுதடைந்து உள்ளதால் அதனை சீரமைப்பது, நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் தமிழ் வாழ்க என்ற எல்.இ.டி. பெயர் பலகை வைப்பது என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சி துணைத்தலைவர் திலகா நன்றி கூறினார்.


Next Story