கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள்

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள்
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை இந்த கிராமத்தை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் ஆண் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கொணவக்கரைக்கு செல்லும் சாலையில் பர்ன்சைடு பிரிவு பகுதியில் 6 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் சாலையை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் நின்றுக் கொண்டிருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story