புதிய கட்டிடம் கட்டப்படுமா?

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஊராட்சி அலுவலகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகி பழமையான கட்டிடமாக உள்ளது.இந்த கட்டிடத்தில் மேற்கூரையின் கான்கிரீட் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வேறு இடத்தில் ஊராட்சி சார்பில் மாற்றி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
புதிய கட்டிடம்
எனவே பொதுமக்கள் நலன் கருதி கொடியம்பாளையம் ஊராட்சியில் உள்ள பழமை வாய்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.