கள்ளக்காதலன் பார்க்க வராததால் பெண் தற்கொலை

ஆத்தூரில் கள்ளக்காதலன் பார்க்க வராததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி ராணி (வயது 32). இவர் பஸ் நிலையத்தில் பழம் வியாபாரம் செய்து வந்தார். செந்தில் உடல் நிலை குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் ஆத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. மேலும் கணவன்-மனைவி போல 2 பேரும் வாழ்ந்து வந்தனர். பெருமாள் அடிக்கடி ராணி வீட்டுக்கு வந்து சென்றுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அவர் ராணி வீட்டுக்கு வருவதில்லை. இதனால் ராணி, பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு, உடனே என்னை பார்க்க வராவிட்டால், விஷம் குடித்து விடுவேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பெருமாள், அவரை பார்க்க வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராணி, எலி மருந்தை தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராணி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.