மூதாட்டியிடம் நகை பறித்த தொழிலாளி கைது


மூதாட்டியிடம் நகை பறித்த தொழிலாளி கைது
x

மூதாட்டியிடம் நகை பறித்த தொழிலாளி கைது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது78). இவர் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். தோளாச்சேரி புது தெருவைச்சேர்ந்தவர் அருண்பாண்டியன் (28). தொழிலாளியான இவர் நேற்று விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து விஜயலட்சுமி ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீர பரஞ்சோதி, பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்து அவரிடம் இருந்த 3 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story