தொழிலாளிக்கு கத்திக்குத்து
தேனி அருகே ெதாழிலாளியை கத்தியால் குத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 30). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜாவை மணிகண்டன் கத்தியால் குத்த முயன்றார். அவர் தடுக்க முயன்றபோது, ராஜாவுக்கு முதுகில் கத்திக்குத்து விழுந்தது. அப்போது மணிகண்டனோடு சேர்ந்து, அவரது அண்ணன் அன்பழகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரா ஆகியோர் சேர்ந்து ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காயம் அடைந்த ராஜா சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், மணிகண்டன், அன்பழகன், வீரா ஆகிய 3 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story