காயத்துடன் உலா வரும் காட்டெருமை

கொடைக்கானலில் காட்டெருமை ஒன்று காயத்துடன் உலா வருகிறது. அதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
திண்டுக்கல்
கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை, கொடைக்கானல் நகருக்குள் அடிக்கடி புகுந்து பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலை வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி பகுதியில் காலில் பலத்த காயத்துடன் காட்டெருமை ஒன்று சாலையில் உலா வந்தது.
இதனை பார்த்த அப்பகுதியை மக்கள், கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினருடன் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் காட்டெருமையை பிடித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த காட்டெருமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியுமா? என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story