இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உரிமம் பெறலாம்

தொழில் நிறுவனங்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உரிமம் பெறலாம் கலெக்டர் தகவல் அளித்தார்
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்துறை உரிமங்களை (தீயணைப்புத் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத் துறை, நகர்ப்புற ஊரமைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் பெறுதல் மற்றும் பிற துறைகள்) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற www.tnswp.com என்ற இணையத் தள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story