மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது


மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி மண்ணிப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 31). கூலித்தொழிலாளி. பொள்ளாச்சியில் வேலை செய்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 67 வயது மூதாட்டியிடம் வீரபாண்டியன் தகாத உறவில் ஈடுபட முயன்றார். அப்போது மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வீரபாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த மூதாட்டி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story