உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வாலிபர் சரண்


உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வாலிபர் சரண்
x

கனியாமூர் கலவர வழக்ககில் உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தாா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளியும் சூறையாடப்பட்டது. கலவரத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கலவரக்காரர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கனியாமூர் கலவர வழக்கில் தேடப்பட்ட கள்ளக்குறிச்சி க.மாமனந்தலை சேர்ந்த இப்ராஹிம்(வயது 26) என்பவர் நேற்று உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்களில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இப்ராஹீம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story