மண்டல பயிற்சி முகாம்
மண்டல பயிற்சி முகாம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மண்டல பயிற்சி முகாம் திருவாரூரில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலக சங்க கட்டிடத்தில் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தஞ்சை மாவட்ட தலைவர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நாகை மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மாநில தணிக்கையாளர் புஸ்பநாதன் வரவேற்றார். ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை தாமதமின்றி விரைவாக அமல்படுத்த வேண்டும். காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும். அரசுத்துறை ஓய்வூதியர் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாவட்ட கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் கோமதிநாயகம், மாநில தலைவர் ராமமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.