வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி
x
தினத்தந்தி 8 Dec 2021 9:22 PM GMT (Updated: 8 Dec 2021 9:22 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி.தொடரை கைப்பற்றியது.

டாக்கா,

பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறியது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 32 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. 

பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் அறுவடை செய்தார். ‘பாலோ-ஆன்’ ஆனதால் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி, பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 84.4 ஓவர்களில் 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 

பாகிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 4 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டும், கேப்டன் பாபர் அசாம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

பாகிஸ்தான் வீரர்கள் சஜித் கான் ஆட்டநாயகன் விருதையும், அபித் அலி தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.


Next Story