ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு...!


ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு...!
x

Image Courtesy: TWITTER 

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத்,

16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ஐதராபத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் சர்மா தலையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாப் டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.


Next Story