தோனி , ரோகித் சர்மா இல்லை..! ஐபிஎல் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் இவர் தான்..! விராட் கோலி ஓபன் டாக்

Image Courtesy : PTI
விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த சில வீரர்கள், தருணங்கள், போன்ற சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பெங்களூரு,
ஜியோ சினிமாவுக்கு பேட்டி அளித்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த சில வீரர்கள், தருணங்கள், போன்ற சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
*ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் மிகசிறந்த வீரர்கள் யார் என்ற கேள்விக்கு , ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மலிங்கா தான் என விராட் கோலி பதிலளித்துள்ளார்.
*ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகசிறந்த ஆல் ரவுண்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் யார் ? என்ற கேள்விக்கு , சேன் வாட்சன் என்றும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் என்றும் விராட் கோலி பதில் அளித்தார்.
*ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்கு எதிராக விளையாட அதிக விரும்புவீர்கள் ? என்ற கேள்விக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் சென்னை அணிக்கு எதிராக ஆடுவது உற்சகமாக இருக்கும் என கோலி பதிலளித்தார்.
*உங்களுடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் யார் உங்கள் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் ? என்ற கேள்விக்கு நான் என்னையே தேர்வு செய்வேன் என்று கோலி தெரிவித்தார்.