நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் ? ஹார்திக் பாண்டியா பதில்


நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் ? ஹார்திக் பாண்டியா பதில்
x

ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடாத நிலையில் , இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார் என ஹார்திக் பாண்டியா பதில் அளித்துள்ளார்.


ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா குடும்ப நிகழ்ச்சி காரணமாக முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்த உள்ளார்

இந்த நிலையில் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடாத நிலையில் , இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார் என ஹார்திக் பாண்டியா பதில் அளித்துள்ளார்.

அதன்படி நாளைய போட்டியில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என'அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆடுகளம் குறித்து ஹார்திக் பாண்டியா கூறுகையில் ,

நான் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இங்கு விளையாடி வருகிறேன். இந்த விக்கெட் இரு தரப்புக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் என்பதால் .இது சவாலானதாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.


Next Story