பம்பரம்
விளையாட்டுகளில் ஒன்று பம்பரம்
சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும்.
சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்றுவதால் சிறுவர்களின் குறித்திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும்.
தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும் போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.
Related Tags :
Next Story