பார்த்திபனை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது - டைரக்டர் எழில்

பார்த்திபன், கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கும் படம், ‘யுத்த சத்தம்.’ இந்தப் படத்தை டைரக்டர் எழில் இயக்குகிறார்.;

Update:2021-11-26 15:19 IST
பார்த்திபனை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது - டைரக்டர் எழில்
படத்தை பற்றி இவர் சொல்கிறார்:

‘‘யுத்த சத்தம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. என் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட படம். நான் இதுவரை நகைச்சுவை பொழுதுபோக்கு படங்களையே இயக்கி இருக்கிறேன். இந்த படம் மர்மங்கள் நிறைந்த திகில் படம். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, இது.

அவருடைய கதையில் இருந்து மாறு படாமல் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டினார். நான் பார்த்திபனிடம் உதவி டைரக்டராக இருந்தவன். அவரை இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இந்த படத்தில் சாய்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.’’

மேலும் செய்திகள்