ஆடு ஜீவிதம்: ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்

'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

Update: 2024-05-22 15:58 GMT

சென்னை,

மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியானது.

'ஆடு ஜீவிதம்' திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்துள்ளது. இப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியது. தற்போதுவரை இப்படம் ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 26-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்