மூத்த மகனுக்காக மீண்டும் இணைந்த நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசும், ஐஸ்வர்யாவும் தற்போது தங்களின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் இளைய மகன் லிங்காவுடன் ஒன்றாக கலந்து கொண்டனர்.;

Update:2022-08-23 16:20 IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் 2004-ல் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் தனித்தனியாக பிரிவதாக அறிவித்தனர். இருவரையும் சேர்த்து வைக்க முன்னணி நடிகர்கள் முயற்சி எடுத்தும் நடக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசும், ஐஸ்வர்யாவும் தற்போது தங்களின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் இளைய மகன் லிங்காவுடன் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது தனுசும், ஐஸ்வர்யாவும் தங்கள் மகன்களுடன் சேர்ந்து குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது மகன் பள்ளி விளையாட்டு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக வலைதளத்தில் பெருமையோடு ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். மகனுக்காக மனக்கசப்பு நீங்கி ஒன்று சேர்ந்த இருவரும் வாழ்க்கையிலும் நிரந்தரமாக இணைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பள்ளி நிகழ்ச்சியில் தனுசுடன் பிரபல பாடகர் விஜய் ஜேசுதாசும் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்