'மாமன்னன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் வடிவேலு

‘மாமன்னன்’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.;

Update:2023-03-03 00:37 IST

Image Courtesy : @RedGiantMovies_ twitter

சென்னை,

2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'மாமன்னன்' படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தில் மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்