தனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.;

Update:2024-03-08 20:04 IST

நடிகர் தனுஷ் தான் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்துக்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்தப் படம் அதிரடி சண்டை கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில், மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு 'குபேரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்