ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு; இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ரன்பீர் கபூர் வரும் 6-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.;
மும்பை,
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கொல்கத்தா, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ரூ.417 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்த இந்தி நடிகர் ரன்பீர் கபூர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரன்பீர் கபூர் இது தொடர்பாக வரும் 6-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.