திருமணத்திற்கு பிறகு சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது? - காஜல் அகர்வால் பதில்

திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள் என்று காஜல் அகர்வால் கூறினார்.

Update: 2024-05-22 06:23 GMT

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் குடும்ப வாழ்க்கையை கவனித்துக்கொண்டு சினிமாவிலும் தொடர்ந்து நடிக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சத்யபாமா என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

திருமணமானதுமே கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் நன்றாக வருகின்றன. எனது சினிமா வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்பும், பின்பும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

இந்தியில் திருமணமான பிறகும் கதாநாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. அவர்கள் பிசியாக நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு சினிமா துறையில் திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள்.

தெலுங்கிலும் விரைவில் மாற்றம் வரும். நான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எனது குடும்பத்துக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்